18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி 2025
April 27 , 2025 68 days 136 0
சவுதி அரேபியாவின் தம்மம் எனுமிடத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 18 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் ஒரு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஹிமான்ஷு ஜாகர் 18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
சீனா 19 தங்கம், 12 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஜப்பான் (7) மற்றும் சவுதி அரேபியா (6) ஆகியன உள்ளன.