பெரு நாட்டில் லிமா நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர்கள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் பதக்க எண்ணிக்கையானது இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உட்பட ஏழு ஆகும்.
இதில் அமெரிக்கா ஏழு பதக்கங்களைப் பெற்றுள்ளது என்பதோடு அமெரிக்கா அதிக தங்கப் பதக்கங்கள் எண்ணிக்கையுடன் இந்தியாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சீனா நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களுடன் இந்தப் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.