TNPSC Thervupettagam

1857 ஆவணக் காப்பகங்கள் - மத்தியப் பிரதேசம்

July 23 , 2026 4 days 135 0
  • மத்தியப் பிரதேசத் தொல்லியல் துறையானது 1857 கிளர்ச்சி தொடர்பான அரிய வரலாற்று ஆவணங்களை சேகரித்துள்ளது, இதில் தாத்யா தோபேயின் கையொப்பம் கொண்ட பதிவு மற்றும் ஜான்சி ராணி லட்சுமிபாயின் அசல் ஓவியம் ஆகியவை அடங்கும்.
  • அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றுக்கான தேசிய முன்னெடுப்பான 'கியான் பாரதம் திட்டத்தின்' கீழ் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் படுகின்றன.
  • இந்தத் தொகுப்பில் முந்தைய சமஸ்தானங்களின் பதிவுகள் மற்றும் ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், மராத்தி/மோடி மற்றும் புந்தேலி போன்ற மொழிகளிலான ஆவணங்கள் அடங்கும்.
  • பன்னாவிலிருந்து சமஸ்கிருதக் கவிதைகள் பற்றிய 70 பக்க 16-ஆம் நூற்றாண்டு கட்டுரையும், சிருங்கார ரசம் மற்றும் நாயிகா-பேதம் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
  • இந்த ஆவணக் காப்பகங்கள் காலனித்துவ நிர்வாகம், 1857 கிளர்ச்சி, சமஸ்தானங்கள் மற்றும் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்