குஜராத்தின் கவ்டா சூரியசக்தி பூங்காவில் இந்தியாவின் முதல் 100 MWh பயன்பாட்டு அளவிலான வனேடியம் ரெடாக்ஸ் ஓட்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (VRFB BESS)திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க அருணாச்சலப் பிரதேசத்தில் 1,000 மெகாவாட் (MW) நயிங் நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சியாங் நதிப் படுகையின் துணை நதியான நயிங் ஆற்றின் குறுக்கே உருவாக்கப்படும்.
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் (IBO) 2026-ஆம் ஆண்டில் இந்தியா 1 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.
பவ்யா குன்வால் (அரியானா) தங்கப் பதக்கத்தையும், சௌமில் மைட்டி (மேற்கு வங்கம்), நிஷித் கலானி (ராஜஸ்தான்) மற்றும் அன்மோல் குமார் (பஞ்சாப்) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர்.
டைகர் லைட்னிங் 2026 என்பது வங்கதேச ஆயுதப் படைகளுக்கும் அமெரிக்க பசிபிக் இராணுவப் படைக்கும் (USARPAC) இடையே ஆண்டுதோறும் நடைபெறும் 13 நாள் இரு தரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
இந்த ஆண்டுக்கான பயிற்சி வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள ஜலாலாபாத் இராணுவ முகாமில் நடைபெற்றது.
1927-ஆம் ஆண்டில் இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட வானொலி ஒலிபரப்பு தொடங்கியதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23 அன்று தேசிய ஒளிபரப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய ஒலிபரப்பு நிறுவனமானது (IBC) தனது முதல் வானொலி சேவையை 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று தொடங்கிய பின்னர் 1936-ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியாக (AIR) உருவானது.
மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2026 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று உலக மூளை தினம் கடைபிடிக்கப் படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு Brain Health: Access For All என்பதாகும்.