2025-26-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சரக்கு ஏற்றுமதி 58.95 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக (2023-24 ஆம் ஆண்டு முதல்) மூன்றாவது பெரிய ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு நீடிக்கிறது.
மாநிலத்தின் சரக்கு ஏற்றுமதி 43.22 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து (2023-24) 51.83 பில்லியன் அமெரிக்க டாலராகவும் (2024-25), 58.95 பில்லியன் அமெரிக்க டாலராகவும் (2025-26) அதிகரித்துள்ளது.
2025-26-ஆம் ஆண்டில், இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.63%, மோட்டார் வாகனங்கள் மற்றும் கார்களில் 33.38%, தோல் மற்றும் தோல் பொருட்களில் 35.59%, ஜவுளி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களில் 23.13%, மற்றும் பொறியியல் இயந்திரப் பொருட்களில் 16.66% ஆகியவற்றை தமிழ்நாடு பங்களித்து உள்ளது.
இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 32.84% (2023-24) லிருந்து 38% (2024-25) ஆகவும், 41.63% (2025-26) ஆகவும் அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 2014-15 மற்றும் 2025-26 ஆம் ஆண்டுக்கு இடையில், தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்களில் ₹12,523 கோடி மதிப்பிலான 94 திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.