மத்தியப் பிரதேசத் தொல்லியல் துறையானது 1857 கிளர்ச்சி தொடர்பான அரிய வரலாற்று ஆவணங்களை சேகரித்துள்ளது, இதில் தாத்யா தோபேயின் கையொப்பம் கொண்ட பதிவு மற்றும் ஜான்சி ராணி லட்சுமிபாயின் அசல் ஓவியம் ஆகியவை அடங்கும்.
அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றுக்கான தேசிய முன்னெடுப்பான 'கியான் பாரதம் திட்டத்தின்' கீழ் இந்த ஆவணங்கள் பாதுகாக்கப் படுகின்றன.
இந்தத் தொகுப்பில் முந்தைய சமஸ்தானங்களின் பதிவுகள் மற்றும் ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், மராத்தி/மோடி மற்றும் புந்தேலி போன்ற மொழிகளிலான ஆவணங்கள் அடங்கும்.
பன்னாவிலிருந்து சமஸ்கிருதக் கவிதைகள் பற்றிய 70 பக்க 16-ஆம் நூற்றாண்டு கட்டுரையும், சிருங்கார ரசம் மற்றும் நாயிகா-பேதம் போன்ற கருத்துகளை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆவணக் காப்பகங்கள் காலனித்துவ நிர்வாகம், 1857 கிளர்ச்சி, சமஸ்தானங்கள் மற்றும் இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகின்றன.