TNPSC Thervupettagam

1857 பெரும் புரட்சி நினைவிடம் - அம்பாலா

November 11 , 2026 5 days 152 0
  • ஹரியானாவின் அம்பாலாவில் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போரின் தியாகிகள் நினைவிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
  • 1857 ஆம் ஆண்டு மே 10 அன்று மீரட்டில் தொடங்கிய 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சி, வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பரவியது.
  • பிரிட்டிஷாரின் அரசியல் இணைப்புகள், பொருளாதாரச் சுரண்டல், கடுமையான வரி விதிப்பு, இந்திய வீரர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் இந்திய சமூக மற்றும் மத நடைமுறைகளில் தலையீடு ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
  • உடனடிக் காரணம் என்ஃபீல்டு துப்பாக்கித் தோட்டாக்களின் அறிமுகமாகும், இதில் பசு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக நம்பப்பட்டதால் இந்து மற்றும் இஸ்லாமிய வீரர்களைப் புண்படுத்தியது.
  • மங்கள் பாண்டே, ராணி லட்சுமிபாய், பகதூர் ஷா ஜாபர், நானா சாகிப், தாந்தியா தோபே மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் ஆகியோர் இதில் முக்கியமான தலைவர்கள் ஆவர்.
  • இந்தப் புரட்சியானது 1858 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அடக்கப்பட்டது.
  • 1858 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்தியாவின் நிர்வாகத்தைப் ஆங்கிலேய முடியாட்சிக்கு மாற்றியது.
  • 22 ஏக்கர் பரப்பளவில் ₹594 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அம்பாலா நினைவிடம், 1857 எழுச்சியில் பங்கேற்றவர்களை கௌரவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்