TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 12 , 2026 4 days 59 0
  • 2026 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கையை (54-20) என்ற கணக்கிலும், பெண்கள் பிரிவில் உகாண்டாவை (35-15) என்ற கணக்கிலும் வீழ்த்தி இரண்டு பிரிவுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
  • காசநோய் (TB) நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பிற்காக, ‘ரீச்’ (REACH - சமூக ஆரோக்கியத்திற்கான கல்வி மற்றும் ஆதரவுப் பணிகளுக்கான வளக் குழு) என்ற இந்தியத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான கோச்சோன் பரிசைப் (Kochon Prize) பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் (VOC) துறைமுகம், 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் முதல் பிரத்யேக பசுமை மெத்தனால் எரிபொருள் நிரப்பும் மையத்தின் வர்த்தக ரீதியான செயல்பாட்டைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
  • துணைத் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், பேராசிரியர் கே. சொக்கலிங்கத்திற்கு கல்விச் சிறப்பிற்கான 2026 ஆம் ஆண்டிற்கான டாக்டர் இராஜேந்திர பிரசாத் விருதை வழங்கிக் கௌரவித்தார்.
  • வனவிலங்குத் தாக்குதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக இருமடங்காக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்