TNPSC Thervupettagam

191 கரப்பான் பூச்சி இனங்கள்

May 30 , 2026 13 hrs 0 min 23 0
  • இந்தியா 191 வகையான கரப்பான் பூச்சி இனங்களைப் பதிவு செய்துள்ளது, இவற்றில் சுமார் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் மட்டுமே வாழக்கூடிய உள்நாட்டு இனங்களாகும். 
  • 'ஜூடாக்சா' அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் ஆய்வானது, கரப்பான் பூச்சிகளுக்கான இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டிஎன்ஏ பட்டைக்குறியீட்டுக் குறிப்பு நூலகத்தை உருவாக்கியுள்ளது.
  • கரப்பான் பூச்சி இனங்களை அடையாளம் காணவும், வகைப்படுத்தவும் உதவும் வகையில் அறிவியலாளர்கள் 100-க்கும் மேற்பட்ட உயர்தர டிஎன்ஏ பட்டைக் குறியீடுகளை உருவாக்கியுள்ளனர்.
  • டிஎன்ஏ பட்டைக்குறியீடு முறையானது உயிரினங்களை அடையாளம் காண, மைட்டோ காண்ட்ரியல் சைட்டோக்ரோம் சி ஆக்சிடேஸ் I மரபணுவில் இருந்து ஒரு குறுகிய மரபணு வரிசையைப் பயன்படுத்துகிறது.
  • கரப்பான் பூச்சிகள் 'பிளாட்டோடியா' வரிசையைச் சேர்ந்தவை, நவீன வகைப் பாட்டின் படி கறையான்களும் இதில் அடங்கும். 
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், புனேவிற்கு அருகிலுள்ள தக்காணப் பீடபூமியில் 'நியோலோபோப்டெரா பெனின்சுலாரிஸ்' என்ற புதிய உள்நாட்டுக் கரப்பான் பூச்சி இனத்தை அறிவியலாளர்கள் அடையாளம் கண்டனர். 

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்