ஸ்வயம் ஷிக்ஷான் பிரயாக் (SSP - Swayam Shikshan Prayog) அமைப்பின் நிறுவனரான பிரேமா கோபாலன் 2018 ஆம் ஆண்டின் இந்திய சமூக தொழில் முனைவோர் (SEOY - Social Entrepreneur of the Year) என கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கிராமப்புற வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துததிலும், அடிமட்ட அளவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதிலும் அவருடைய பணிகளைப் பாராட்டி இது வழங்கப்பட்டுள்ளது.
இந்த SEOY விருதானது, ஜீபிலாந் பாரதிய பவுண்டேஷன் மற்றும் சமூக தொழில் முயற்சிகளுக்கான ஸ்வாப் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து 2010-ல் உருவாக்கப்பட்டது.
இது நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகளை செயல்படுத்தும் உறுதியான மற்றும் உயர் தாக்க சமூக தொழில் முனைவோர்கள் மற்றும் உறுதியளிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கிறது.
சமூக தொழில் முயற்சிக்கான ஸ்வாப் அறக்கட்டளை என்பது உலகப் பொருளாதார மன்றத்தைச் சார்ந்த (World Economic Forum -WEF) அமைப்பாகும்.