2019 ஆம் ஆண்டின் அனைவரும் அணுகக் கூடிய தேர்தல்கள் குறித்த தேசியப் பயிலரங்கம்
December 24 , 2019 1966 days 597 0
இந்தியத் தேர்தல் ஆணையமானது 2019 ஆம் ஆண்டின் அனைவரும் அணுகக் கூடிய தேர்தல்கள் குறித்த ஒரு தேசியப் பயிலரங்கத்தைப் புது தில்லியில் ஏற்பாடு செய்தது.
இந்தப் பயிலரங்கத்தின் போது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரான சுனில் அரோரா ‘தடைகளைக் கடத்தல் - எனக்கு மை வைக்கப்பட்டது’ என்ற ஒரு சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த பயிலரங்கத்தின் போது “2019 ஆம் ஆண்டின் அணுகல் அறிக்கை” என்ற ஒரு அறிக்கையும் வெளியிடப் பட்டுள்ளது.
இது இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், சமீபத்திய முயற்சிகள் மற்றும் அனைத்து மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் பரிந்துரைகள் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டிய ஒரு ஆவணமாகும்.