TNPSC Thervupettagam

குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான நாக்பூர் தீர்மானம்

December 24 , 2019 1965 days 656 0
  • மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடத்தப்பட்ட ‘பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துதல் - அரசாங்கங்களின் பங்கு’ என்ற பிராந்திய மாநாட்டின் போது ‘நாக்பூர் தீர்மானம் - குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு முழுமையான அணுகுமுறை’ என்ற ஒரு தீர்மானம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்த மாநாடானது மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையினால் (Department of Administrative Reforms and Public Grievances - DARPG) ஏற்பாடு செய்யப் பட்டது.
  • மத்திய அரசானது வெளிப்படைத் தன்மை, குடிமக்களை மையமிட்ட திட்டங்கள் மற்றும் குடிமக்கள் பங்கேற்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்காக குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • சிறந்த ஆளுகைக்காக இதற்கு முன்னர் ஷில்லாங் பிரகடனம் மற்றும் ஜம்மு தீர்மானம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப் பட்டு உள்ளன.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • சிறந்த முறையில் சேவைகளை வழங்கல்
  • குறைகளைத்  தீர்த்தல்
  • டிஜிட்டல் தளங்களின் மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
  • துடிப்பான  கொள்கைகளை  வகுத்தல்
  • தொழில்நுட்ப நிபுணத்துவப் பரிமாற்றம்
  • சிறந்த ஆளுகைக் குறியீடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்