இந்தியக் கடலோரக் காவல் படையானது 2 நாட்கள் நடைபெறும் பிராந்திய அளவிலான மாசுபாட்டு பதிலெதிர்ப்புப் பயிற்சியான ‘ஸ்வச் சமுந்திரா NW-2019’ என்ற பயிற்சியை கட்ச் வளைகுடாவில் உள்ள வடினார் பகுதியில் நடத்தியது.
எண்ணெய் மாசுபாட்டு சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பதிலெதிர்ப்புச் செயல் முறையை உருவாக்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.