இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான கிருஷ்ணசாமி விஜயராகவன் புது தில்லியில் “EChO வலையமைப்பு (EChO Network)” என்ற தேசிய நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார்.
இந்த வலையமைப்பானது இந்தியாவில் பன்முகத் தன்மை வாய்ந்த தலைமைக்கான மாதிரியை வழங்குகின்றது.
இந்தத் திட்டத்தின் நோக்கமானது பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு குடிமக்கள், அரசாங்கம் மற்றும் பிறரின் மூலமாக ஆராய்ச்சி சம்பந்தமான அறிவு மற்றும் இந்திய சூழலியல் & சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு வருவதாகும்.