TNPSC Thervupettagam

அறிவியல்சார் கட்டுரைகள்

December 22 , 2019 1960 days 566 0
  • அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான  கட்டுரைகளை அதிக அளவில் வெளியிடுவதில் உலகின் மூன்றாவது நாடு இந்தியா என்று அமெரிக்காவின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அறிவியல் தொடர்பான உலகளாவிய மொத்தக் கட்டுரைகளில் 20.67 சதவீதத்தை சீனக் கட்டுரைகள் கொண்டிருக்கின்றன.
  • இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
  • அறிவியல் தொடர்பான கட்டுரைகளை வெளியிடுவதில் சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா 16.54 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
  • இது அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பால் (National Science Foundation - NSF) தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
  • உலகளவில் அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியா தற்பொழுது 5.31 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்