18வது தேசியக் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வாரியம் (National Maritime Search and Rescue Board - NMSARB)
December 22 , 2019 1959 days 585 0
இந்தக் கூட்டத்தை இந்தியக் கடலோரக் காவல்படையானது (Indian Coast Guard - ICG) புது தில்லியில் ஏற்பாடு செய்தது.
இந்த வருடாந்திரக் கூட்டமானது கொள்கை ரீதியான பிரச்சினைகள், வழிகாட்டுதல்கள் & நடைமுறைகளை வகுத்தல் மற்றும் தேசியத் தேடல் மற்றும் மீட்புத் திட்டத்தின் (National Search and Rescue Plan - NSRP) செயல்திறனை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மூன்று புதிய நிரந்தர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தப் புதிய உறுப்பினர்களாவன: மத்திய கப்பல் துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு, பால் & மீன் வளத் துறை மற்றும் பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS - Indian National Centre for Ocean Information Service).
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியக் கடலோர காவல்படையானது, கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான இந்தியாவின் தலைமை நிறுவனமாகும்.