அடுத்தத் தலைமுறைப் போக்குவரத்து அமைப்புகளுக்கான முதலாவது சிறப்புமிகு மையம்
December 22 , 2019 2065 days 558 0
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ஒரு பல்கலைக்கழகமாகக் கருதப்படும் தேசிய ரயில் போக்குவரத்து நிறுவனமானது புது தில்லியின் ரயில் பவனில் உள்ள இங்கிலாந்தின் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இது அடுத்தத் தலைமுறைப் போக்குவரத்து அமைப்புகளுக்கான முதலாவது சிறப்புமிகு மையத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிர்மிங்காம் ரயில்வே ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமானது (Birmingham Centre for Railway Research and Education - BCRRE) ஐரோப்பாவில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மிகப்பெரிய பல்கலைக் கழகத்திற்கு இணையான ஒரு மையமாகும்.