TNPSC Thervupettagam

​​மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம்

December 22 , 2019 1958 days 605 0
  • தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை நினைவுகூறுவதற்கான தேசியக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார்.
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காந்தியவாதிகள், சிந்தனையாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முன்னாள் செயலாளர்களான திரு. கோஃபி அன்னான் மற்றும் திரு. பான் கீ மூன் உள்பட ஒன்பது சர்வதேச உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

காந்தி குடியுரிமை கல்விப் பரிசு

  • மகாத்மா காந்தியின் கொள்கைகளை மேம்படுத்த உதவும் வகையில் காந்தி குடியுரிமை கல்வி பரிசு என்ற ஒரு பரிசை ஏற்படுத்த இருப்பதாக போர்ச்சுக்கீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா அறிவித்துள்ளார்.
  • காந்தியின் பல்வேறு எண்ணங்கள் மற்றும் மேற்கோள்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதானது வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரே அயல்நாட்டு பிரதமர் போர்ச்சுக்கீசிய பிரதமர் ஆவார்.
  • இந்தப் பரிசின் முதலாவது பதிப்பானது விலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட இருக்கின்றது. ஒரு தேசத்தின் மகத்துவமானது அத்தேசத்தில் விலங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்துத் தான் தீர்மானிக்க முடியும் என்று மகாத்மா காந்தி கூறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்