2019 ஆம் ஆண்டின் இந்திய எஃகு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு
January 24 , 2019 2384 days 780 0
எஃகு தொழிற்துறையின் 4-வது சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கான 2019 ஆம் ஆண்டின் எஃகு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மும்பையின் கோரிகோனில் உள்ள NSE வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்புடன் இணைந்து (Federation of Indian Chamber of Commerce and Industry - FICCI) மத்திய எஃகுத் துறை அமைச்சகத்தினால் இது நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் கருத்துருவானது, "எஃகின் தேவை மற்றும் விநியோகத்தின் சமமான வளர்ச்சி: புதிய இந்தியாவைக் கட்டமைத்தல்" என்பதாகும்.
இந்திய எஃகு - 2019 என்பது உலகளவில் எஃகு தொழிலகத்தில் போட்டியை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் தேசிய எஃகு கொள்கை முன்னெடுப்புகளின் வரிசையில் அமைந்த ஒரு பகுதியாகும்.