TNPSC Thervupettagam

மருந்துகளின் விலை நிர்ணயத்தை கண்காணிப்பதற்கான குழு – நிதி ஆயோக்

January 24 , 2019 2385 days 738 0
  • மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்து கண்காணிப்பதற்காக நிதி ஆயோக்கின் தலைமையில் ஒரு நிலைக் குழுவை மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.
  • நாட்டிலுள்ள மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை இது மேற்கொண்டால் தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையத்தின் (National Pharmaceuticals Pricing Authority - NPPA) அதிகாரங்கள் பறிக்கப்படும் நகர்வாக இது இருக்கும் என்று அறியப்படுகிறது.
  • மலிவு விலையிலான மருந்துகள் மற்றும் சுகாதார சேவைகள் மீதான நிலைக் குழுவானது நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) தலைமையில் செயல்படும்.
  • மருந்துகளின் விலை மற்றும் சுகாதார சேவைகள் குறித்து NPPAக்கு பரிந்துரைக்கும் அமைப்பாக இக்குழு செயல்படும்.
  • இக்குழு தானாகவோ அல்லது மருத்துவத் துறை, NPPA அல்லது சுகாதாரத்துறை ஆகியவற்றின் பரிந்துரைகளினாலோ பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யும்.
  • NPPA ஆனது தன்னாட்சி உடைய ஒழுங்குமுறை அமைப்பாக 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • சுகாதார அமைச்சகத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய இன்றியமையாத மருந்துப் பொருட்கள் பட்டியலில் (National List of Essential Medicines - NLEM) உள்ள மருந்துகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்வது, அவற்றை மேற்பார்வையிடுவது மற்றும் விலை வரம்பை நிர்ணயம் செய்வது ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்