2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் - ஜெய்ர் போல்சனாரோ
November 15 , 2019 2093 days 637 0
11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தினார்.
இந்திய குடிமக்களுக்கு நுழைவு இசைவு அற்ற (VISA FREE) பயணத்திற்கு அனுமதியளிக்கும் பிரேசில் அதிபரின் முடிவை அவர் வரவேற்றார்.
இந்தியாவின் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை போல்சனாரோ ஏற்றுக் கொண்டார்.