ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு
November 15 , 2019 2093 days 680 0
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதை ஆதரித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்த அமர்வானது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான (Chief Justice of India - CJI) ரஞ்சன் கோகாயால் தலைமை தாங்கப்பட்டது.
“யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிறர் (எதிர்) மத்தியப் புலனாய்வு அமைப்பு" என்ற வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
CJI உடன் இணைந்து நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் இத்தீர்ப்பை எழுதி, வழங்கினார்.
இந்த அமர்வின் மூன்றாவது நீதிபதியான கே.எம். ஜோசப் முதன்மைத் தீர்ப்புடன் ஒத்துப் போவதாக தீர்ப்பு கூறினார். மேலும் இவர் அப்புகாரில் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் முன் அனுமதியுடன் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தார்.