2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருவநிலை பற்றிய அறிக்கை
January 15 , 2023 947 days 430 0
2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் வருடாந்திர சராசரி நில மேற்பரப்பு காற்றின் வெப்ப நிலை நீண்ட காலச் சராசரியை (1981-2010 காலம்) விட 0.510 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
இது 1901 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து பதிவாகியுள்ள ஐந்தாவது வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டில் பதிவான உலகளாவியச் சராசரி வெப்பநிலையானது, தற்போது தொழில்துறை காலத்திற்கு முந்தைய அளவின் (1850-1900) சராசரியை விட 1.15 ± 0.13 °C அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மழைப் பொழிவானது 1971-2020 ஆம் கால கட்டத்தின் அடிப்படையில், அதன் நீண்ட காலச் சராசரி மதிப்பில் 108% ஆகும்.
குளிர்காலத்தில் பதிவான மழைப்பொழிவானது, அதன் நீண்ட காலச் சராசரியில் 147% ஆகும்.
பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவானது அதன் நீண்ட காலச் சராசரியில் 99% ஆகும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் பதிவான மழைப்பொழிவானது, அதன் நீண்ட காலச் சராசரியில் 106 % ஆகும்.
பருவமழைக்குப் பிந்தையப் பருவத்தில் பதிவான மழைப்பொழிவானது அதன் நீண்ட காலச் சராசரியில் 119% ஆகும்.