‘நிதி உள்ளடக்கத்திற்கான உலகளாவியக் கூட்டாண்மை’ குறித்த மூன்று நாட்கள் அளவிலான G20 நாடுகளின் கூட்டம் ஆனது கொல்கத்தாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எண்ணிம நிதி உள்ளடக்கம், பணம் அனுப்புதல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.
G 20 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வெளியே உள்ள தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புதலில் ஆகும் அதிக செலவினம் குறித்து விவாதித்தனர்.
இதனை 2027 ஆம் ஆண்டிற்குள் சராசரியாக 3 சதவீதமாக குறைக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது பணம் அனுப்புதலுக்கான செலவினமானது சராசரியாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சுமார் 6 சதவீதமாக உள்ளது.