2024-25 ஆம் ஆண்டின் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை
October 23 , 2023 1092 days 635 0
மத்திய அரசானது, 2024-25 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கு கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை (MSP) குவிண்டாலுக்கு ₹150 உயர்த்தி ₹2,275 ஆக அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அதிகபட்சமாக உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையாகும்.
தற்போது, 2023-24 ஆம் ஆண்டு சந்தைப்படுத்தல் பருவத்திற்கான (ஏப்ரல்-மார்ச்) கோதுமையின் MSP ஆனது ஒரு குவிண்டாலுக்கு ₹2,125 ஆக உள்ளது.
பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவின் (CCEA) கூட்டத்தில் இது தொடர்பான முடிவானது எடுக்கப் பட்டது.
முக்கிய ராபி (குளிர்கால) பருவப் பயிரான கோதுமையானது அக்டோபரில் பயிரிடத் தொடங்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
MSP என்பது விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் உறுதி செய்யப் படும் குறைந்த பட்ச ஆதரவு விலை விகிதமாகும்.
மேலும் இந்த விகிதத்திற்குக் குறைவாக தானியங்களானது அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கொள்முதல் முகமைகளால் வாங்கப் படுவதில்லை.