TNPSC Thervupettagam

2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களின் சாதனைகள்

May 20 , 2025 16 hrs 0 min 30 0
  • 2024-25 ஆம் நிதியாண்டில், பெரிய துறைமுகங்களின் சரக்குக் கையாளுதலில் சுமார் 4.3% என்ற அதிகபட்ச வருடாந்திர வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளன.
  • 2023-24 ஆம் நிதியாண்டில் 819 மில்லியன் டன்களாக இருந்த இது 2024-25 ஆம் நிதி ஆண்டில் ~855 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
  • இந்த வளர்ச்சிக்குக் காரணம், கொள்கலன்களின் போக்குவரத்து (10% வரை), உரங்கள் (13%), பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் உராய்வு/உயவு எண்ணெய் (POL) (3%), மற்றும் இதர பொருட்கள் (31%) ஆகியவற்றின் அளவு அதிகரித்தது.
  • ஓடிசாவின் பாராதீப் துறைமுக ஆணையம் (PPA) மற்றும் குஜராத்தின் காண்ட்லா தீன்தயாள் துறைமுக ஆணையம் (DPA) ஆகியவை சரக்கு கையாளுதலில் சுமார் 150 மில்லியன் டன் (MT) வரம்புகளைக் கடந்து ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டி உள்ளன.
  • கூடுதலாக, நவி மும்பையின் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) ஆனது, 20 அடி கொள்கலனுக்குச் சமமான (TEU – Twenty Foot Equivalent Unit) சுமார் 7.3 மில்லியன் என்ற ஏற்றுமதி அளவினை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்