2024-25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களின் சாதனைகள்
May 20 , 2025 111 days 158 0
2024-25 ஆம் நிதியாண்டில், பெரிய துறைமுகங்களின் சரக்குக் கையாளுதலில் சுமார் 4.3% என்ற அதிகபட்ச வருடாந்திர வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளன.
2023-24 ஆம் நிதியாண்டில் 819 மில்லியன் டன்களாக இருந்த இது 2024-25 ஆம் நிதி ஆண்டில் ~855 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சிக்குக் காரணம், கொள்கலன்களின் போக்குவரத்து (10% வரை), உரங்கள் (13%), பெட்ரோலியம், எண்ணெய் மற்றும் உராய்வு/உயவு எண்ணெய் (POL) (3%), மற்றும் இதர பொருட்கள் (31%) ஆகியவற்றின் அளவு அதிகரித்தது.
ஓடிசாவின் பாராதீப் துறைமுக ஆணையம் (PPA) மற்றும் குஜராத்தின் காண்ட்லா தீன்தயாள் துறைமுக ஆணையம் (DPA) ஆகியவை சரக்கு கையாளுதலில் சுமார் 150 மில்லியன் டன் (MT) வரம்புகளைக் கடந்து ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டி உள்ளன.
கூடுதலாக, நவி மும்பையின் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) ஆனது, 20 அடி கொள்கலனுக்குச் சமமான (TEU – Twenty Foot Equivalent Unit) சுமார் 7.3 மில்லியன் என்ற ஏற்றுமதி அளவினை எட்டியது.