TNPSC Thervupettagam

2024-25 ஆம் நிதியாண்டில் கடல்சார் உணவு ஏற்றுமதி

August 28 , 2025 9 days 54 0
  • இந்தியாவின் கடல்சார் உணவு ஏற்றுமதி 2024–25 ஆம் நிதியாண்டில் 7.45 பில்லியன் டாலரை எட்டியது.
  • 2023–24 ஆம் நிதியாண்டில் 17,81,602 மெட்ரிக் டன்னாக இருந்த ஏற்றுமதி அளவு ஆனது 2024–25 ஆம் நிதியாண்டில் 16,98,170 மெட்ரிக் டன்னாகக் குறைந்தது.
  • பதப்படுத்தப்பட்ட/உறைய வைக்கப்பட்ட இறால் ஆனது முன்னணி ஏற்றுமதிப் பொருளாகத் தொடர்ந்து 5.17 பில்லியன் டாலர் வருவாயினை ஈட்டியது என்பதோடு மேலும் மொத்த கடல்சார் உணவு வருவாயில் சுமார் 70% பங்கினை அளித்தது.
  • முந்தைய ஆண்டில் 7,16,004 மெட்ரிக் டன்னாக இருந்த இறால் ஏற்றுமதியானது 7,41,529 மெட்ரிக் டன்னாக சற்று உயர்ந்தது.
  • அமெரிக்கா 2.71 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதியுடன் மிகப்பெரிய கொள்முதல் நாடாகவும், அதைத் தொடர்ந்து 1.28 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதியுடன் சீனாவும் இடம் பெற்றது.
  • உறைய வைக்கப்பட்ட மீன் மற்றும் கணவாய் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது சிறந்த ஏற்றுமதி பொருட்கள் இடங்களைப் பிடித்துள்ளன என்பதோடு இதன் மதிப்பு முறையே 622.60 மில்லியன் டாலர் மற்றும் 367.68 மில்லியன் டாலர் ஆகும்.
  • இந்தியா தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடல்சார் உணவுகளை ஏற்றுமதி செய்கிறது மற்றும் உயர் மதிப்பு மிக்க உலகளாவியச் சந்தைகளுக்கு மதிப்பு கூட்டப் பட்ட சலுகைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்