2024-25 ஆம் நிதியாண்டில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி
April 27 , 2025 4 days 49 0
தமிழ்நாடு மாநிலமானது, 2024-25 ஆம் நிதியாண்டில் மின்னணுப் பொருட்கள் மீதான ஏற்றுமதியில் 14.65 பில்லியன் டாலர் என்ற வரலாறு காணாத ஒரு உச்சத்தினை எட்டி உள்ளது.
இந்தியாவின் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழக அரசானது சுமார் 41.23% பங்கைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு 9.56 பில்லியன் டாலராக இருந்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தற்போது 53% வளர்ச்சியானது பதிவாகியுள்ளது.