இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளையானது 2025 ஆம் ஆண்டிற்கான பரிசை ஆறு முக்கியப் பிரிவுகளில் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் 100,000 டாலர் மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிகில் அகர்வால், சந்தை வடிவமைப்பு மற்றும் ஒதுக்கீட்டு வழிமுறைகளுக்காக பொருளாதாரப் பிரிவில் இந்தப் பரிசினை வென்றார்.
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சுஷாந்த் சச்தேவா, கணித சீராக்கம் மற்றும் வழிமுறைக் கோட்பாட்டிற்காக என பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் இந்தப் பரிசினை வென்றார்.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆண்ட்ரூ ஓலெட், பிராகிருதம், கன்னடம் மற்றும் இந்திய மொழியியல் பற்றிய ஆராய்ச்சிக்காக மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவில் இப்பரிசினை வென்றார்.
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின் அஞ்சனா பத்ரிநாராயணன், டிஎன்ஏ சீராக்கம் மற்றும் மரபணுப் பராமரிப்பு ஆய்வுகளுக்காக வாழ்க்கை அறிவியல் பிரிவில் இப்பரிசினை வென்றார்.
மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் சப்யசாச்சி முகர்ஜி, சிக்கலான இயக்கவியல் மற்றும் இணக்க கணிதத்திற்காக கணித அறிவியல் பிரிவில் இப்பரிசினை வென்றார்.
கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திஷ் மந்திரம், நீடித்த நிலையான மின்வேதியியல் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலமான இரசாயன உற்பத்திக்கான இயற்பியல் அறிவியல் பிரிவில் பரிசினைப் பெற்றார்.