December 8 , 2025
23 days
93
- ஜல் சக்தி அமைச்சகம் ஆனது, 2025 ஆம் ஆண்டிற்கான ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி (JSJB) விருதுகளை அறிவித்தது.
- இந்த விருதுகள் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட ஜல் சக்தி அபியான்: கேட்ச் தி ரெயின் (JSA: CTR) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
- தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை சிறப்பாகச் செயலாற்றும் மாநிலங்கள் ஆகும்.
- மிர்சாபூர் (உத்தரப் பிரதேசம்), பலோட் (சத்தீஸ்கர்), மற்றும் அடிலாபாத் (தெலுங்கானா) ஆகியவை இதில் முன்னணி மாவட்டங்கள் ஆகும்.
- ராய்ப்பூர் (சத்தீஸ்கர்) மற்றும் ஐதராபாத் (தெலுங்கானா) ஆகியவை இதில் சிறந்த மாநகராட்சிக் கழகங்கள் ஆகும்.
- சிறந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் புரவல அமைப்புகள் Jaltara Save Groundwater, Art of Living, மற்றும் கர்மபூமி சே மாதபூமி ஆகியவை ஆகும்.
Post Views:
93