EARTH (வேளாண்மை, கிராமப்புற மாற்றம் மற்றும் முழுமையான அதிகாரமளிப்பு) உச்சி மாநாடு 2025 ஆனது குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது.
'சஹகர் சாரதி' முன்னெடுப்பின் கீழ் சுமார் 13க்கும் மேற்பட்ட சேவைகள் மற்றும் தயாரிப்புகள் தொடங்கப்பட்டன.
அவற்றில் டிஜி KCC (டிஜிட்டல் கிசான் கடன் அட்டைகள்), பிரச்சார சாரதி, வலைதள சாரதி, கூட்டுறவு ஆளுகைக் குறியீடு, ePACS (மின்னணு முதன்மை வேளாண் கடன் சங்கங்கள்), உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புச் செயலி, சிக்சா சாரதி மற்றும் சாரதி தொழில்நுட்ப மன்றம் ஆகியவை அடங்கும்.
கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுத் தீர்வுகளை மையமாகக் கொண்ட மூன்று தொடர்களில் இந்த உச்சி மாநாடு இரண்டாவது ஆகும்.
2026 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற உள்ள மூன்றாவது கூட்டத்தில் ஒரு கொள்கை கட்டமைப்பு முடிவு செய்யப்படும்.
இந்த முன்னெடுப்பு ஆனது இந்தியாவில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மற்றும் கூட்டுறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.