2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் - IMF
April 26 , 2025 70 days 156 0
உலகப் பொருளாதாரத்திற்கான வளர்ச்சி மீதான முன் கணிப்பு ஆனது, முந்தைய சில மதிப்பீடுகளிலிருந்து அரை சதவீதப் புள்ளி குறைந்து அது 2.8% ஆகக் குறைக்கப் பட்டு உள்ளது.
சீனாவைப் பொறுத்தவரையில், 2025 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட புதுப்பிப்பு அறிக்கையில் 4.6 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் ஆனது, 2025 ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாகவும், 2026 ஆம் ஆண்டில் 6.3 சதவீதமாகவும் வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்கப் பொருளாதாரத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பு 1.8% ஆகக் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கணிப்பை விட சுமார் ஒரு சதவீதப் புள்ளி குறைந்துள்ளது.