TNPSC Thervupettagam

2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி

July 2 , 2025 3 days 46 0
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் (2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்) இந்தியா 13.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நடப்புக் கணக்கு உபரியை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% உபரியைப் பதிவு செய்தது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாதக் காலாண்டில் பதிவான 11.3 பில்லியன் டாலர்ப் பற்றாக்குறை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதத்திலிருந்து இது பதிவான கூர்மையான தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது.
  • உபரி மதிப்பும் ஓராண்டிற்கு முன்னதாக இதே காலாண்டில் பதிவான 4.6 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்திலிருந்து உயர்ந்தது.
  • 2025 ஆம் நிதியாண்டின் முழு நிதியாண்டிற்கு, நடப்புக் கணக்கு பற்றாக்குறை 23.3 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% ஆக இருந்தது.
  • இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 26.0 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்தினை விட சிறப்பாகப் பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்