2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நடப்புக் கணக்கு உபரி
July 2 , 2025 125 days 160 0
2025 ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் (2025 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்) இந்தியா 13.5 பில்லியன் டாலர் மதிப்பிலான நடப்புக் கணக்கு உபரியை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% உபரியைப் பதிவு செய்தது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர்-டிசம்பர் மாதக் காலாண்டில் பதிவான 11.3 பில்லியன் டாலர்ப் பற்றாக்குறை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதத்திலிருந்து இது பதிவான கூர்மையான தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது.
உபரி மதிப்பும் ஓராண்டிற்கு முன்னதாக இதே காலாண்டில் பதிவான 4.6 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்திலிருந்து உயர்ந்தது.
2025 ஆம் நிதியாண்டின் முழு நிதியாண்டிற்கு, நடப்புக் கணக்கு பற்றாக்குறை 23.3 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% ஆக இருந்தது.
இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 26.0 பில்லியன் டாலர் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதத்தினை விட சிறப்பாகப் பதிவானது.