2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள்
August 28 , 2025 67 days 96 0
இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் 2024–25 ஆம் நிதியாண்டில் 67.74 சதவீதம் அதிகரித்து 41.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதோடு, இது முந்தைய ஆண்டு 24.8 பில்லியன் டாலராக இருந்தது.
ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதோடு இது இந்திய வணிகங்களில் அதிகரித்து வரும் உலகளாவிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
ESG (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை) முன்னுரிமைகள், உலகளாவிய வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் GIFT (குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம்) ஆகியவற்றால் இந்த உயர்வு பதிவானது.
வளர்விகித வரி மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற புதிய இடங்கள் முதலீட்டு ஆதரவைப் பெற்றன.
குஜராத்தின் GIFT நகரம் ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளி நாட்டு முதலீடுகளில் 100 சதவீதம் உயர்வைக் கண்டது என்பதோடு வரி சார்ந்த மேலாண்மை மற்றும் செயல்பாட்டுத் திறனை இது வழங்குகிறது.