TNPSC Thervupettagam

2025-26 ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் நடப்பு கணக்கு உபரி

June 12 , 2026 11 hrs 0 min 63 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, 2025-26 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை) இந்தியா $7.1 பில்லியன் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7%) நடப்பு கணக்கு உபரியை பதிவு செய்துள்ளது.
  • வலுவான சேவைகள் ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட சாதனை அளவிலான பணம் அனுப்புதல் ஆகியவற்றால் இந்த உபரி சாத்தியமானது.
  • நிகர சேவைகள் வரவானது முந்தைய ஆண்டின் 4-வது காலாண்டில் இருந்த $53.3 பில்லியனில் இருந்து, 2025-26 ஆம் ஆண்டில் நிதியாண்டின் 4-வது காலாண்டில் $60.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.
  • தனிநபர் பணம் அனுப்புதல் வரவுகள், 2024-25 ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் $33.9 பில்லியனாக இருந்த நிலையில், தற்போது சாதனை அளவாக $43.5 பில்லியனை எட்டியுள்ளது.
  • இந்த காலாண்டில் இந்தியாவின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை $83.4 பில்லியனாக இருந்தது, அதே சமயம் ஒட்டு மொத்த வரவு செலவு சமநிலை (BoP) $7.2 பில்லியன் உபரியைப் பதிவு செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்