TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் PE–VC முதலீடுகள்

January 4 , 2026 3 days 60 0
  • தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன முதலீட்டு (PE–VC) நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களில் 61 ஒப்பந்தங்களில் 3,513 மில்லியன் டாலரை முதலீடு செய்தன.
  • துணிகர முதலீடு நுண்ணறிவு தரவுகளின்படி, இது 2024 ஆம் ஆண்டை விட மொத்த முதலீட்டு மதிப்பில் 20% அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (Q4), PE–VC முதலீடுகள் 14 ஒப்பந்தங்களில் 421 மில்லியன் டாலராகக் கடுமையாகக் குறைந்தன.
  • மூன்றாம் காலாண்டில் (Q3) முதலீடு செய்யப்பட்ட 1,461 மில்லியன் டாலரை விட Q4 முதலீட்டு அளவு கிட்டத்தட்ட 71% குறைவாக இருந்தது.
  • 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் 46 ஒப்பந்தங்கள் பதிவு செய்யப் பட்டதுடன் தமிழ்நாட்டில் ஏஞ்சல் முதலீடுகள் மாறாமல் இருந்தன.
  • தேசிய அளவில், PE–VC நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்களில் 1,164 ஒப்பந்தங்களில் சுமார் 33 பில்லியன் டாலரை முதலீடு செய்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்