மதுரை மற்றும் கேம்பர்லே - இரட்டை நகரங்களின் உறவுகள்
January 3 , 2026 4 days 119 0
மதுரை நகரானது, ஐக்கியப் பேரரசில் உள்ள கேம்பர்லே என்ற நகரத்துடன் இரட்டை நகரங்கள் கூட்டாண்மையில் கையெழுத்திட உள்ளது.
இந்தக் கூட்டாண்மை பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களுக்கு இடையேயான நீண்ட கால ஒத்துழைப்பாகும்.
கல்வி மற்றும் ஆராய்ச்சி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், சுற்றுலா, பொருளாதார மேம்பாடு மற்றும் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஐக்கியப் பேரரசு பல்கலைக்கழகங்கள், பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் கூட்டு ஆராய்ச்சி வாய்ப்புகளைப் பெறுவார்கள்.