இந்தியா 2025 ஆம் ஆண்டில் 524.62 லட்சம் டன் உரங்களை உற்பத்தி செய்து, அதன் உள்நாட்டு தேவையில் சுமார் 73 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளது.
இதில் யூரியா, DAP (டை-அம்மோனியம் பாஸ்பேட்), NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) மற்றும் SSP (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்) ஆகியவை அடங்கும்.
உர உற்பத்தியானது, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து, 2021 ஆம் ஆண்டில் 433.29 லட்சம் டன்னிலிருந்து 2022 ஆம் ஆண்டில் 467.87 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் 507.93 லட்சம் டன்னாகவும், 2024 ஆம் ஆண்டில் 509.57 லட்சம் டன்னாகவும், 2025 ஆம் ஆண்டில் 524.62 லட்சம் டன்னாகவும் இருந்தது.