முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப் பதிவுகள் 8.4% அதிகரித்துள்ளன.
மாநிலத்தில் உள்ள 147 பிராந்தியப் போக்குவரத்து அலுவலகங்கள் (RTO) மற்றும் பிரிவு அலுவலகங்கள் (UO) ஆகியவற்றில் மொத்தம் சுமார் 21.18 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான பதிவுகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டில் சுமார் 16.4 லட்சம் பதிவுகளுடன் இரு சக்கர வாகனங்கள் மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளன.
இப்பதிவுகளில் பெட்ரோல் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன என்பதோடுஇது பதிவு செய்யப் பட்ட மொத்த வாகனங்களில் சுமார் 75% ஆகும்.
2024 ஆம் ஆண்டில் 1.35 லட்சமாக இருந்த மின்சார வாகனங்களில், பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களின் பதிவுகள் 2025 ஆம் ஆண்டில் 1.74 லட்சமாக அதிகரித்தன.