2025 ஆம் ஆண்டு திருத்தம் - தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994
May 1 , 2025 20 days 95 0
இந்த மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிறுவப்பட்ட விளம்பரப் பலகைகள், மின்னணுத் திரைகள் மற்றும் அறிவிப்புப் பதாகைகள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்க முயல்கிறது.
இந்தச் சட்டத்தின் 172-B என்ற ஒரு பிரிவானது, விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் விதத்திற்கான விதிகளை உருவாக்க மட்டுமே அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது, ஆனால் விளம்பரப் பலகைகள், மின்னணுத் திரைகள் மற்றும் அறிவிப்புப் பதாகைகள் நிறுவுவது தொடர்பான விதிகளை ஒழுங்குமுறைப் படுத்தவில்லை.
இந்த மசோதாவின்படி, தொகுதி மேம்பாட்டு அதிகாரி (கிராமப் பஞ்சாயத்துகள்) கட்டணத்துடன் கூடிய விண்ணப்பங்களைப் பெற்று, அந்த உரிமத்திற்கு அனுமதி வழங்கலாம் அல்லது வழங்க மறுக்கலாம்.
வழங்கப்பட்ட ஒரு உரிமத்தினைத் தொகுதி மேம்பாட்டு அதிகாரி ரத்து செய்யலாம் அல்லது இடைநிறுத்தலாம்.
தேவையான அனுமதிகள் இல்லாமல் நிறுவப்பட்ட எந்தவொரு விளம்பரப் பலகைகள், மின்னணுத் திரைகள் அல்லது அறிவிப்புப் பதாகையையும் பறி முதல் செய்து அகற்ற தொகுதி மேம்பாட்டு அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.