2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு
May 15 , 2026 122 days 312 0
சி. ஜோசப் விஜய் 2026 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று தமிழக சட்டப்பேரவையில் வெற்றி பெற்றார்.
அங்கு வந்திருந்த 171 சட்டமன்ற உறுப்பினர்களில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர்; எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் 22 பேர் எதிராக வாக்களித்ததுடன், இது அதிமுக சட்டமன்றக் கட்சியில் ஏற்பட்ட பிளவைக் காட்டியது.
பாமக-வின் நான்கு உறுப்பினர்களும், பாஜக-வின் ஒரே உறுப்பினரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர் என்ற நிலையில் திமுக கட்சி உறுப்பினர்களும், தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்தும் இந்த வாக்கெடுப்புக்கு முன் வெளிநடப்பு செய்தனர்.
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நடத்திய முறைப்படியான வாக்கெடுப்பு, 47 அதிமுக உறுப்பினர்களிடையே நிலவிய பிளவைத் தெளிவுபடுத்தியது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததுடன், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினர் ஆர். சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி அளித்ததுடன் இப்பிரச்சினையை தேர்தல் மனு மூலம் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனத்தின் 226வது சரத்தின் கீழ் அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, தேதி குறிப்பிடாமல் (sine die) பேரவை ஒத்தி வைக்கப் பட்டதுடன் தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு முழுமையாக நேரலை செய்யப் பட்டது.