TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை

January 23 , 2026 3 days 75 0
  • ஜனவரி 20 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட தனது வழக்கமான உரையைப் படிக்க தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி மறுத்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
  • தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆளுநர் அவையின் தொடக்க அமர்வின் போது அவையை விட்டு வெளியேறினார்.
  • ஆனால், சபாநாயகர் M. அப்பாவு, அரசு தயாரித்த உரையை தமிழில் வாசித்த பிறகு மட்டுமே அவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அரசியலமைப்பின் 176வது சரத்தின் படி, சட்டமன்றத்திற்குப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமர்வின் தொடக்கத்திலும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் தொடக்கத்திலும் மாநிலச் சட்டமன்றங்களில் ஆளுநர் சிறப்பு உரை நிகழ்த்துவார்.
  • ஆளுநர் தனது தனிப்பட்ட கருத்துக்களை அதில் சேர்க்கவோ அல்லது மாநில அரசு தயாரித்த உரையின் சில பகுதிகளை நீக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்