இந்தியாவின் வட்டி செலுத்துதல்கள் 2026 ஆம் நிதியாண்டில் 12.76 டிரில்லியன் ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதோடு இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
2016 ஆம் நிதியாண்டில் 71 டிரில்லியன் ரூபாயாக இருந்த (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51.5%) அரசாங்கக் கடன் ஆனது 2026 ஆம் நிதியாண்டில் 200 டிரில்லியன் ரூபாயாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.1%) உயர்ந்தது.
2025 ஆம் நிதியாண்டில் பொதுக் கடன் 185.94 டிரில்லியன் ரூபாயாக இருந்தது, இதில் 157.11 டிரில்லியன் ரூபாய் உள் நாட்டு, 8.74 டிரில்லியன் ரூபாய் வெளிப்புற கடன் மற்றும் 20.09 டிரில்லியன் ரூபாய் பொதுக் கணக்குப் பொறுப்புகள் அடங்கும்.
பெருந்தொற்றினால் ஏற்பட்ட நிதி விரிவாக்கம் காரணமாக, கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இடையேயான விகிதம் 2021 ஆம் நிதியாண்டில் 61.4% ஆக உயர்ந்ததோடு மேலும் அதனை 2031 ஆம் ஆண்டிற்குள் 50% ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் நிதியாண்டில் சராசரியாக 6.6% ஆக இருந்த 10 ஆண்டு கால நிறைவு காலம் கொண்ட பத்திர வருவாய் ஆனது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6.4% ஆகக் குறைந்துள்ளதுடன் தற்போது இது 6.5–6.55% ஆக உள்ளது.
நிதிப் பற்றாக்குறையானது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கில் 0.8% ஆகக் குறைந்தது, இது ஓராண்டிற்கு முன்பு 3.1% ஆக இருந்தது என்ற நிலையில் 2025 ஆம் நிதியாண்டானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% என்ற நிதிப் பற்றாக்குறையுடன் முடிவடைந்தது.
கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும், பொறுப்புகளைப் பரவலாக்கவும், மறுநிதியளிப்பு அபாயங்களை நிர்வகிக்கவும் அரசாங்கம் பத்திரங்களை வாங்குதல் மற்றும் பரிமாற்றங்களைப் பயன்படுத்துகிறது.