TNPSC Thervupettagam

2026 மத்திய பட்ஜெட் புள்ளி விவரங்கள்

February 5 , 2026 13 days 119 0
  • 2026-27 நிதியாண்டிற்கான மொத்த சந்தைக் கடன்கள் ₹17.2 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு, நிகரக் கடன்கள் ₹11.7 லட்சம் கோடியாக உள்ளது.
  • இது 2026 நிதியாண்டில் இருந்த ₹14.8 லட்சம் கோடியுடன் ஒப்பிடப்பட்டது மற்றும் 2026 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளை விட 16% அதிகமாகும்.
  • 2026 நிதியாண்டிலேயே, ₹14.82 லட்சம் கோடி கடன்களை ஈர்த்துக் கொள்வதில் பத்திரச் சந்தை சிரமப்பட்டது.
  • நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு இது 2025-26 ஆம் ஆண்டில் இருந்த 4.4% ஐ விட சற்றே குறைவாகும்.
  • 2026-27 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2025-26 திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.1 சதவீதமாக இருந்த கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2026-27 பட்ஜெட் மதிப்பீடுகளில் 55.6% ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2026-27 ஆம் ஆண்டிற்கு, கடன் அல்லாத வருவாய்கள் ₹36.5 லட்சம் கோடியாகவும், மொத்தச் செலவினம் ₹53.5 லட்சம் கோடியாகவும் கணிக்கப்பட்டுள்ளது என்பதோடு நிகர வரி வருவாய்கள் ₹28.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதனுடன் ஒப்பிடுகையில், 2025-26 திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கடன் அல்லாத வருவாய்கள் ₹34 லட்சம் கோடியாகவும், நிகர வரி வருவாய்கள் ₹26.7 லட்சம் கோடியாகவும் இருந்தன.
  • மொத்தச் செலவினம் ₹49.6 லட்சம் கோடியாக இருந்தது என்பதோடு இதில் மூலதனச் செலவினமாக சுமார் ₹11 லட்சம் கோடி அடங்கும்.
  • இந்த பட்ஜெட்டிற்கான நிதி ஆதாரங்களில் கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளே மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன என்பதோடு இது மொத்த வரவுகளில் 24% ஆகும், இது முந்தைய ஆண்டிலிருந்து மாறாமல் உள்ளது.
  • வருமான வரி இரண்டாவது பெரிய பங்களிப்பாக 21% ஆக உள்ளது (கடந்த ஆண்டு 22% ஆக இருந்தது), அதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் 15% ஆக உள்ளன என்ற நிலையில் இது 2025-26 ஆம் ஆண்டில் 18% ஆக இருந்தது.
  • நிறுவனங்கள் வரியும் 18% என்ற குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது.
  • மீதமுள்ள பட்ஜெட் வளங்கள் வரி அல்லாத வருவாய், மத்திய கலால் வரிகள், சுங்க வரிகள் மற்றும் கடன் அல்லாத மூலதன வரவுகள் ஆகியவற்றிலிருந்து வருகின்றன.
  • பட்ஜெட்டில், செலவினத்தில் 22% (கடந்த ஆண்டிலிருந்து மாறாமல்) மாநிலங்களின் வரிகள் மற்றும் தீர்வைகளின் பங்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து வட்டி செலுத்துதல்களுக்கு 20% ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மொத்தச் செலவினத்தில் 26 சதவீதமும், வருவாய் வரவுகளில் 40 சதவீதமும் வட்டி செலுத்துதல்களுக்குச் செல்கிறது.
  • மொத்த செலவினத்தில் 17 சதவீதம் மத்தியத் துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
  • பாதுகாப்புத் துறைக்கு 11 சதவீதமும், நிதி ஆணையம் மற்றும் பிற மானியங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு முறையே 8 சதவீதம் மற்றும் 7 சதவீதமும் ஒதுக்கப் படுகின்றன.
  • அரசாங்கச் செலவினத்தில் 2 சதவீதம் ஓய்வூதியங்களுக்காகச் செலவிடப்படுகிறது என்ற நிலையில் மீதமுள்ள 7 சதவீதம் மற்ற இனங்களுக்காகச் செலவிடப்படுகிறது.
  • 2026-27 ஆம் ஆண்டில் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்