TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு சத்பாவனா திவாஸ்

August 23 , 2026 5 hrs 0 min 64 0
  • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும், தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், அமைதி மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் சத்பாவனா திவாஸ் (Sadbhavana Diwas) அனுசரிக்கப் படுகிறது.
  • ராஜீவ் காந்தி 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவின் பம்பாயில் (தற்போதைய மும்பை) பிறந்தார்.
  • அவர் இந்திரா காந்தியின் மகனும் ஜவகர்லால் நேருவின் பேரனும் ஆவார்.
  • இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அவர் பிரதமரானார், மேலும் அந்தப் பதவியில் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி வரை பணியாற்றினார்.
  • தனது 40 வயதில், இந்தியாவின் மிக இளைய பிரதமராக ராஜீவ் காந்தி ஆனார்.
  • அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வணிக ரீதியான விமானியாகப் பணிபுரிந்தார்.
  • கல்விக்கான அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக 1986 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை (NPE), அவரது பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) அமைப்பு 1986 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • 1985 ஆம் ஆண்டின் 52வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அரசியலமைப்பில் பத்தாவது அட்டவணையைச் சேர்த்தது.
  • 1988 ஆம் ஆண்டின் 61வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆகக் குறைத்து, தேர்தலில் இளைஞர்களின் பங்கை அதிகரித்தது.
  • டெல்லி மற்றும் மும்பையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்காக அவரது பதவிக்காலத்தில் 1986 ஆம் ஆண்டில் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (MTNL) நிறுவப் பட்டது.
  • அவர் 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார்.
  • அவருக்கு 1991 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
  • சத்பாவனா திவாஸ் என்பது உணர்வுபூர்வமான ஒற்றுமை, மத நல்லிணக்கம், அமைதியான சகவாழ்வு மற்றும் உரையாடல் மற்றும் அரசியலமைப்பு வழிகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்ப்பது ஆகிய மதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்