2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை
January 23 , 2026 3 days 72 0
ஜனவரி 20 ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட தனது வழக்கமான உரையைப் படிக்க தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி மறுத்து, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஆளுநர் அவையின் தொடக்க அமர்வின் போது அவையை விட்டு வெளியேறினார்.
ஆனால், சபாநாயகர் M. அப்பாவு, அரசு தயாரித்த உரையை தமிழில் வாசித்த பிறகு மட்டுமே அவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பின் 176வது சரத்தின் படி, சட்டமன்றத்திற்குப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமர்வின் தொடக்கத்திலும், ஒவ்வோர் ஆண்டின் முதல் அமர்வின் தொடக்கத்திலும் மாநிலச் சட்டமன்றங்களில் ஆளுநர் சிறப்பு உரை நிகழ்த்துவார்.
ஆளுநர் தனது தனிப்பட்ட கருத்துக்களை அதில் சேர்க்கவோ அல்லது மாநில அரசு தயாரித்த உரையின் சில பகுதிகளை நீக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை.