TNPSC Thervupettagam

2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வட்டி

August 27 , 2025 10 days 45 0
  • இந்தியாவின் வட்டி செலுத்துதல்கள் 2026 ஆம் நிதியாண்டில் 12.76 டிரில்லியன் ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதோடு இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • 2016 ஆம் நிதியாண்டில் 71 டிரில்லியன் ரூபாயாக இருந்த (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 51.5%) அரசாங்கக் கடன் ஆனது 2026 ஆம் நிதியாண்டில் 200 டிரில்லியன் ரூபாயாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.1%) உயர்ந்தது.
  • 2025 ஆம் நிதியாண்டில் பொதுக் கடன் 185.94 டிரில்லியன் ரூபாயாக இருந்தது, இதில் 157.11 டிரில்லியன் ரூபாய் உள் நாட்டு, 8.74 டிரில்லியன் ரூபாய் வெளிப்புற கடன் மற்றும் 20.09 டிரில்லியன் ரூபாய் பொதுக் கணக்குப் பொறுப்புகள் அடங்கும்.
  • பெருந்தொற்றினால் ஏற்பட்ட நிதி விரிவாக்கம் காரணமாக, கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இடையேயான விகிதம் 2021 ஆம் நிதியாண்டில் 61.4% ஆக உயர்ந்ததோடு மேலும் அதனை 2031 ஆம் ஆண்டிற்குள் 50% ஆகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் நிதியாண்டில் சராசரியாக 6.6% ஆக இருந்த 10 ஆண்டு கால நிறைவு காலம் கொண்ட பத்திர வருவாய் ஆனது, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6.4% ஆகக் குறைந்துள்ளதுடன் தற்போது இது 6.5–6.55% ஆக உள்ளது.
  • நிதிப் பற்றாக்குறையானது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கில் 0.8% ஆகக் குறைந்தது, இது ஓராண்டிற்கு முன்பு 3.1% ஆக இருந்தது என்ற நிலையில் 2025 ஆம் நிதியாண்டானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% என்ற நிதிப் பற்றாக்குறையுடன் முடிவடைந்தது.
  • கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும், பொறுப்புகளைப் பரவலாக்கவும், மறுநிதியளிப்பு அபாயங்களை நிர்வகிக்கவும் அரசாங்கம் பத்திரங்களை வாங்குதல் மற்றும் பரிமாற்றங்களைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்