TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டிற்குள் ஹெபடைடிஸ் ஒழிப்பு

September 27 , 2026 4 days 59 0
  • நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் ஒரு நிகழ்வில் 2030 ஆம் ஆண்டிற்குள் பொது சுகாதார அச்சுறுத்தல்களாக உள்ள ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகியவற்றை ஒழிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
  • வைரஸ் ஹெபடைடிஸைத் தடுப்பது, பரிசோதிப்பது, கண்டறிவது, சிகிச்சை அளிப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றை இந்தியா வலுப்படுத்தி வருகிறது.
  • ஹெபடைடிஸ் பி நோய்த்தடுப்பு, பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனை, இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சை மற்றும் பாதுகாப்பான இரத்தமாற்ற சேவைகள் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
  • ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு ஆதரவு வழங்கப்படுகிறது.
  • 2030 ஆம் ஆண்டு இலக்கை அடைவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் தடுப்பு, பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான சமமான அணுகல் ஆகியவற்றை இந்தியா வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்